முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் ஆட்சித்தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு ஆய்வு

 





தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கண்காணிப்பு மேற்கொள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகக்கொண்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் திரு.ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் திரு.அமர்நாத், முனைவர்.கனகவேல் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலை பகுதிக்கு சென்று இன்று (11.05.2021) கள ஆய்வு மேற்கொண்டனர்.                                      


 

அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை பார்வையிட்டனர்.  ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு வரும் பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது என்பது குறித்தும் ஆக்சிஜன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்லும் தனியான பாதை குறித்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர். ஆக்சிஜனை வழங்க குழு அனுமதித்துள்ள எடை மேடை அமைக்கப்படும் பணிகள் குறித்தும் பார்வையிட்டனர்.

மேலும் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் ஆக்சிஜன் தயார் செய்ய பராமரிப்பு பணிகள் மற்றும் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை வல்லுநர் குழுவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அலுவலர்கள் உடனிருந்தனர்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...