முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது

----------------------------

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொலி மூலம் இன்று (28.05.2021)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்; சென்னையில் இருந்து காணொலி மூலமும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), திரு.மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), திரு.ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.



  இக்கூட்டத்தில்  மாவட்ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதிகளிலும் கொரோனா தொற்று விபரங்களையும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி ஊராட்சிகளில் 127 கிராம ஊராட்சிகள் கொரோனா பாதிப்பு இல்லாத ஊராட்சிகளாக உள்ளது குறித்தும் மற்ற ஊராட்சிகளில் கொரோனா பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் கொரோனா கட்டுப்படுத்திட 3 மற்றும் அதற்கு மேல் ஒரே பகுதியில் தொற்று கண்டறியப்பட்டால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், தனிமைப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவி நடவடிக்கைகள் குறித்தும், கிராம ஊராட்சி பகுதிகளில் அதிக தொற்று இருந்தால் அந்த பகுதியிலேயே மினி கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பது குறித்தும், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதற்கு கிராம ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு சுழல் கேடயங்கள் வழங்கப்படும். முழுமையாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு கேடயம் மற்றும் கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகளுக்கு ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகின்றனர். இதை சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தீவிரப்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தாங்கள் வீடுகளில் தனிமையாக இருக்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களின் தொற்று நிலை குறித்தும் கண்காணிக்க வேண்டும். வீடு தனிமையில் இருப்பவர்கள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். 3 நபர்களுக்கு மேல் உள்ள தெருக்கள் சிறிய தடை செய்யப்பட்ட பகுதியாக செய்யும்போது அவர்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு அடுத்த முறை ஊசி போடுவதற்கான தேதியுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படும் ஊராட்சிக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் கேடயம் மற்றும் கூடுதல் நிதி கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகளில் அலுவலர்களுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நம் அனைவரின் கூட்டு நடவடிக்கைளால் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தொற்று இல்லாத மாவட்டமாகவும், பாதுகாப்பான மாவட்டமாகவும் திகழும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப.  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.சங்கரேஸ்வரி மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...