முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000 / மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்


திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நியாயவிலைகடைகளுக்குச் சென்று பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார். 

-----------------------------

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மேல ஆத்தூர், சேதுகுவைத்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீனவர் நலன்-மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகைய்யா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                        


கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி மாண்புமிகு.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியின்போது கொரானா காலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1000ஃ- வழங்கப்பட்டது.  பொதுமக்களுக்கு ரூ.5000ஃ- வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.  ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ.4000ஃ- வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் அதனடிப்படையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் ரூ.4000ஃ- வழங்கும் உத்தரவிற்கு முதல் கையெழுத்திட்டார்கள்.  முதல்கட்டமாக, ரூ.2000ஃ- வழங்கப்பட்டது.  தற்போது மீதமுள்ள ரூ.2000ஃ-ம் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை தொகுப்பு பொருட்களும் இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,01,947 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.100.39 கோடி மதிப்பில் கொரானா நிவாரண உதவித்தொகையும், ரூ.20.20 கோடி மதிப்பில் 14 பொருட்களடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படுகிறது.  இதன் மூலம் மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் சிரமமின்றி இருக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


   நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அப்துல் காசிம் முக்கிய பிரமுகர்கள் திரு.உமரி சங்கர், திரு.பில்லா ஜெகன், திரு.ராம ஜெயம், திரு.நவீன் குமார்;, வட்டாட்சியர் இசக்கி ராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...