முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ். சாலை அமைக்கும் பணிகளை. அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்

-----------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். 

பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து விஎம் சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.435 கோடி மதிப்பிட்டிலும், கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறி;ச்சி வரை ரூ.202 கோடி மதிப்பிட்டிலும் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சாலையில் உள்ள வளைவுகள் நேர் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி சாலை பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. சாலை பணிகள் 2 ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும். தமிழகம் தொழில் வளர்ச்சியிலும் மேன்மை அடைய வேண்டும். சாலை வசதியிலும் மேம்பாடு அடைய வேண்டும் என்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சாலை 7 மீட்டர் அகலம் உள்ளது. இச்சாலை 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஏதெனும் நில எடுப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கும் இழப்பிட்டு தொகை வழங்கப்படும். இச்சாலை அமைப்பதன் மூலம் தென்காசி பகுதியில் இருந்து இப்பகுதி தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள் நேரடியாக கொண்டு வர வசதியாக இருக்கும். மேலும் இப்பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. தொழில்கள் அதிக அளவில் தென் பகுதியை நோக்கி வர வேண்டும் என்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருமதி.பி.கீதா, உதவி கோட்ட பொறியாளர் திருமதி.நிர்மலாசாக்லின், உதவி பொறியாளர் திரு.ஹரிகரசுதன், முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.பில்லாஜெகன், திரு.எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகவேல் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...