முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில், ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்




தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு  இரண்டாம் கட்டமாக முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை                                                                                                                                                                                                                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர்             திரு. எஸ். ஜெய்க குமார்  அவர்கள் இன்று வழங்கினார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 24.05.2021 முதல் 07.06.2021 வரை தமிழக அரவு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது. இதனை அமல்படுத்தும் பணியில் தூத்துக்குடி சுமார் 2000 போலீசார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


காவல்துறையினரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் கொரோன தடுப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடைகள்  வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (03.06.2021) தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், மணியாச்சி ஆகிய நான்கு உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று (04.06.2021) இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய நான்கு உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.



இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் திரு. மயில்குமார், திரு. கணேசபெருமாள் மற்றும்  தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...