முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் : நாடாளுமன்ற உறுப்பினர்: .கனிமொழி கருணாநிதி ஆய்வு




தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு : .கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

___________________

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 06.06.2021 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் பாலம் நீட்டிப்பு பணி நடைபெற்று வருகிறது.; பெரியதாழை மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கவேண்டும். கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இன்றைய தினம் பெரியதாழை பகுதியில் கடல் அரிப்பு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். மீனவ மக்களின் கோரிக்கையை நிரந்தர தீர்வு நிச்சயமாக காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள். 

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.விஜயராகவன், மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.கங்காதரன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.தயாநிதி, மீன்பிடித்தள உதவி செயற்பொறியாளர், திருமதி.வயலா, சாத்தான்குளம் வட்டாட்சியர் திரு.லெட்சுமி கணேஷ், முக்கிய பிரமுகர்கள்: உமரிசங்கர், எஸ்.ஜெ.ஜெகன், பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், எஸ்.பி.ஜே.சுந்தர ராஜன், பெரியதாழை பங்குதந்தை எஸ்.சுசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...