முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா பரிசோதனைக்காக கலைஞர் மருத்துவமனையாக மாறறம்

 

             



 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா பரிசோதனைக்காக அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார்

-------------------------------

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.மார்கண்டேயன்  அவர்களால் அரசு கலைஞர் மருத்துவமனைகாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்துவைத்து அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துவக்கிவைத்தார். மேலும் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டசத்து பெட்டகம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.மார்கண்டேயன்  அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைத்து அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றியுள்ளார். இவ் மருத்துவமனை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியில் இருப்பார்கள். சளி பரிசோதனை,  கொரோனா தடுப்பூசி போடுதல், சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்படும். இதன் மூலம் இப் பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்கும் என தெரிவித்தார்.                           

அதனை தொடர்ந்து இசைமேதை நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திடத்திற்கு மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து   விளாத்திகுளம் அம்பாள் பகுதியில் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி வேளாண்மை துறையின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கிவைத்தார். அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், சுகாதர பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.போஸ்கோராஜா, விளாத்திகுளம் செயல் அலுவலர் திரு.சுந்தரவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.இன்பசேகரன், வேளாண்மைதுறை இணை இயக்குநர் திரு.முகைதீன், துணை இயக்குநர் திருமதி.சாந்திராணி, முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன் பெரியசாமி, திரு.ஆனந்தசேகர், திரு.மாரிமுத்து, திரு.வேல்சாமி, திரு.அன்புராஜன் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...