முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

 


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது

-----------------------


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (22.07.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஐ;., இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., பிஷப் ஸ்டீபன் அந்தோணி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில், தூய பனிமய மாதா பேராலய திருவிழா, கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

நம்முடைய மேதகு ஆயர் அவர்கள் நமது தூத்துக்குடி நகரில் அமையபெற்றுள்ள தமிழகத்தில் உள்ள 4 பெசிலிக்காவில் ஒரு பெசிலிக்காக இருக்கக்கூடிய பனிமய மாதா ஆலயத்துடைய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பாக உலக அளவில் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். கொடியேற்றம் அன்று லட்சக்கணக்கானோர்கள் கலந்துகொள்வார்கள். கொரோனா தொற்றில் இருந்து இ;ந்த திருவிழா நடத்தாத நிலையில் இருந்து இந்த ஆண்டு ஊரடங்காக இருப்பதால் ஆலயங்களில் ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனால் இத்திருவிழாவில் முறைப்படி எல்லா ஆராதனைகளும் நடைபெறும். ஆனால் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். சப்பர பவனி உள்ளிட்டவைகள் நடைபெறாது. மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகள் அனைத்தும் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூடியுப் சேனல்கள் மூலம் நான் அனைவரும் நேரயாக ஆராதனைகளில் பங்பேற்று கொள்ளலாம் என ஆயர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். நமது அரசம் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை வணங்கலாம், தரிசிக்கலாம், ஆனால் திருவிழா நிகழ்வுகள் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என தெரிவித்தார். 

பின்னர் திருவிழா நடத்துவது தொடர்பாக பிஷப் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் தெரிவித்ததாவது:

தூய பனிமய மாதா பேராலய திருவிழா இந்த ஆண்டு 26.07.2021 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் பனிமய தாயின் திருவிழா தொடங்கி 05.08.2021 வியாழன் அன்று நிறைவு பெறும். இந்த ஆண்டு திருவிழாவில் கொரோனா ஊரடங்கின் காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடத்தபடாது. 26.7.2021 திங்கட்கிழமை அன்று காலை கொடியேற்ற வைபவம் மக்கள் பங்கேற்பு இன்றியே நடைபெறும். அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்க ஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசிர் ஆகியன மக்கள் பங்றே;பு இன்றி நடைபெறும். வருகின்ற மக்களும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும். மக்கள் பங்கேற்கும் நோக்குடன் வரும்பொழுது காலை திருப்பயண திருப்பலிகளில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் வழிபாடுகள் நடத்தப்படாத நேரத்தில் பேரலாயம் திறந்தே இருக்கும். மக்கள் அரசின் கட்டளைககுள்கு உட்பட்டு தனித்தனியாக வந்து தங்களது வழிபாட்டினை நடத்திக்கொள்ளலாம். பெருவிழாவின் முக்கியமான நினைவுகள் அனைத்தும் சூரியா தொலைக்காட்சி, அற்புதம் ஏசு தொலைக்காட்சி, விண்மீன் மியுசிக் தொலைக்காட்சி, கொற்கை தொலைக்காட்சி, சுனோஸ் பசுபிகா யூடியுப் சேனல் ஆகியவற்றின் நேரலையில் ஒளிபரப்பப்படும். எனவே இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனிமய தாயின் பெருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும், பெரும்பாலான நிகழ்வுகள் தொலைக்காட்சி வாயிலாகவே திருப்பலியில் பங்கேற்று பயன்பெற உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தூய பனிமய மாதா ஆலய பங்குதந்தை குமாரராஜா, கோவில் கமிட்டி உப தலைவர் திரு.அர்ட்லி, செயலாளர் திரு.கென்னடி, பொருளாளர் திரு.ஜாகீர்கோச் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...