முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம்

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

-------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.07.2021) நடைபெற்றது.                                                                                                                         .


கூட்டத்தில் ஈட் ரைட் கேம்பஷ் விருது பெற்ற ஸ்பிக் நிறுவனத்தினைரையும், கைஜினிக் ரேட்டிங் விருது பெற்ற சத்யா ரெஸ்டாரண்ட் நிறுவுனத்தினைரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்கள். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முகமாக கார்வல் எனர்ஜி நிறுவனத்தாருக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிப்பு கேன்களை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

                                                                                               


                                                                                             தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு கலப்படங்களை அதிக அளவில் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். உணவு நிறுவனங்கள் அனைத்தும் பதிவு சான்றிதழை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவிலான உணவு பொருட்கள் சாம்பிள்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். கோவில்களில் விற்கப்படும் பிரசாதங்களும் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவைகளை வெளியிட வேண்டும். உப்பு விற்பனை செய்யும் நிறுவனங்கள் அட்ரஸ் இல்லாத பேக்கிங்களில்  உப்புகளை விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பட்டி உற்பத்தி செய்பவர்கள் அதில் சீனி கலந்து தயாரிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் கருப்பட்டிகள் தரமானதாக உள்ளதா என்பதை அதிக அளவில் சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு துறை அலுவலர்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில்  உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கணேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் திரு.மாரியப்பன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளண்மை) திரு.வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமதி.சொர்ணலதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குற்றாலிங்கம், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, தூத்துக்குடி மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் திரு.செந்தில்ஆறுமுகம், தன்பாடு உப்பு ஏற்றுமதி விற்பனையாளர்கள் சங்க செயலாளர் திரு.சேர்மநாதன், திரு.எம்பவர் சங்கர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...