முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பான ஆய்வு




தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

------------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் திரு.குமரகுருபரன்,இ.ஆ.ப., அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.சந்திரமோகன்,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், சுற்றுலா மேம்பாடு திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் (விளாத்திக்குளம்), திரு.சண்முகையா அவர்கள்  (ஒட்டப்பிடாரம்) ஆகியோர் உடனிருந்தனர். 

       


         ....                                           ஆய்வின்போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்கிட கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் கட்டிட பணிகள் தொடர்பாகவும், கிரி பிரகார பகுதியில் கல் மண்டபம் அமைத்தல் தொடர்பாகவும், மேலும், கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், மேலும், ஏழை பக்தர்கள் அதிக அளவில் வரும் திருக்கோயில் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலிலும் பல்வேறு வசதிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், திருச்செந்தூர் பகுதியை சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற பெரிய பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.   

ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.அன்புமணி, முக்கிய பிரமுகர்கள், திரு.ஜெகன் பெரியசாமி, திரு.உமரி சங்கர், திரு.ஆனந்த சேகரன், உதவி ஆணையர் திருமதி.ரோசாலி சுமதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகாக்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...