அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்; அதிக அளவில் வேலைவாய்ப்பு. திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி



அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு        www.skilltraining.tn.gov.in     என்ற இணையதளம் வாயிலாக gவிண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

--------------------

அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு           www.skilltraining.tn.gov.in    என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும். தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.  பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கீழ்காணும் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை மாதம் ரூ.750ஃ-

பேருந்து கட்டணச் சலுகை

மிதிவண்டி

மடிக்கணினி

பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள்

2 செட் சீருடைகள் 

1 செட் காலணிகள்

மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,திருச்செந்தூர் முதல்வரை நேரில் அணுகவும். 04639-242253, 8695047687

அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்; அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ஐவுஐ-ல் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்