முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையio

 .


தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். 

-----------------------

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று (15.07.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 



இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்திட ரூ.40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இங்கு மீன்களை வைத்து பாதுகாத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் கோல்டு ஸ்டோரேஜ் கட்டப்பட உள்ளது. தற்போது புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணித்து மீனவர்கள் மற்றும் இங்கும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.                                                                                             

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.அமல்சேவியர், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ், தூத்துக்குடி ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவர் திரு.சேவியர்வாஸ், வட்டக்காரர் சங்க தலைவர் திரு.பிரவின், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் திருமதி.வயலா,  திரு.விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் திரு.பொன்சரவணன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள், பல்வேறு மீனவர் சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர். 

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...