முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை. அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்

 



    தூத்துக்குடி. மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்.

----------------------

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது, சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பார்வையிட்டார். முடநீக்கு சிகிச்சைகள், நோய் நீரிழிவு ஆகிய சிகிச்சைகள் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வீடுவீடாக சென்று நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. 

                                                         


 இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று ஓட்டப்பிடாரத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார தன்னார்வலர்கள் மருத்துவம் பார்க்கப்படும். தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்குரிய மருந்து, மாத்திரைகளை வீட்டிலேயே கொடுத்து பரிசோதிக்கும் திட்டமாகும். தமிழ்நாடு முழுவதும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு பயனடைந்து வருகிறார்கள்.தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 46,000 பேர், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 19,000 பேர் என மொத்தம் மொத்தம் 65,000 பேர் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். 

 


இந்த மகத்தான திட்டம் தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் கருங்குளம் வட்டாரத்திலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்திலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 5488 குடும்பங்கள், கருங்குளம் வட்டாரத்தில் 2798 குடும்பங்கள் பயன்பெறுவார்கள். மேலும் இதுதவிர முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதியோர்கள் மற்றும் படுத்த படுக்கையில் இருப்பவர்கள் அவர்களின் வடுகளுக்கே சென்று முடநீக்கு சிகிச்சையாளர்கள் மற்றும் நோய் ஆதரவு செவிலியர்கள் மூலம் சிகிச்சையளித்து குணமடையவும், தமிழ்நாடு அரசால் இந்த மகத்தான மருத்துவ சேவை செய்வதற்கு அதற்கான வாகன வசதியும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.


 

     நமது வீட்டில் உள்ள முதியோர்களை குழந்தைகளைப்போல் நாம் கவனித்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும். முதியோர்களுக்கு சேவை அதிக அளவில் தேவைப்படுவதால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூக நலத்துறையின் மூலம் ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களுக்கான சேவை செய்யக்கூடிய துறையாக உள்ளது. நமது வீடுகளில் இருக்கின்ற தாயாக இருந்தாலும், மாமியாராக இருந்தாலும் அவர்களை வயதான காலத்தில் ஒரேபோல் சமமாக கருதி நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதியோர்களுக்கு ஊன்றுகோல் போல் உதவிகரமாக இருக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். முதியோர்களுக்கான நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் மக்களை தேடி மருத்துவ துறையினர் சென்று தேவையான பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்குவார்கள். இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய திட்டம் ஆகும். மக்கள் இத்திட்டத்தினை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேவையாற்றக்கூடிய தன்னார்வலர்கள், மக்கள் அழைத்த உடன் சென்று அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.முருகவேல், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திரு.ரமேஸ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.காசிவிஸ்வநாதன், முக்கிய பிரமுகர் திரு.ஆனந்தசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.தனலட்சுமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ராஜசெல்வி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.தங்கமணி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...