முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது.



அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பளார் அவர்கள் பேசும்போது இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். காவல்துறை எப்போதும்  உங்கள் நண்பqர்கள் தான், உங்கள் ஊரில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தால், அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல்  தெரிவித்தால், அதை உடனடியாக  நிவர்த்தி செய்;ய்படும்.                                                                                                                                                            தூத்துக்குடிழுவதும்டிழுவதும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அந்தந்த கிராமங்களுக்குச் சென்று இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த சமூக நீதி விழிப்புணர்வு முகாம் என்பது உங்கள் பகுதியில் உள்ள அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி சமம் என்பதையும், சட்டங்கள் அனைவருக்கும்  பொதுவானவை என்பது குறிப்பிடுவதாகும். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள கல்வியறிவு என்பது மிக முக்கியமானதாகும், உங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு வரை படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால்,  அதுதான் சமூக நீதி, பள்ளிப்படிப்போடு நிறுத்தி விடாமல் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும், குறிப்பாக பெண்களும் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டும் அதற்கான சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் எல்லா இடங்களிலும்  கிடைக்கிறது. மேலும் இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதால் குற்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் இது போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் சிறந்த முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று கூறினார். 


மேலும் தற்போது கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவி வரும் சூழ்நிலை உள்ளதால் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.


பின்னர் கிராம மக்கள் 100 பேருக்கு வேஷ்டி, சேலைகள், 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் பள்ளி குழந்;தைகள் 50 பேருக்கு அறிவை வளர்க்க கூடிய பொது அறிவு புத்தகங்கள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் அருட்திரு. அம்புரோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. இராஜசுந்தர், தனிப்பிரிவு காவலர் திரு. ராஜேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...