முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

       





     தூத்துக்குடி  மாவட்டம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்       06.08.2021*        அன்று பிரையன்ட் நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*



கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி  (06.08.2021)     அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிரையன்ட்நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.*



*♻️அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சானிடைசர், முககவசங்கள், கபசுரகுடிநீர், துண்டுபிரசுரங்கள் வழங்கியதுடன், பொதுமக்கள் முக கவசம் அணிவதை வலியுறுத்தி அருகிலுள்ள கடைகளில் ‘முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் கொடுக்கப்படும்” என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.*




  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்;சிகள் கடந்த 5 நாட்களாக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் 3ம் அலை கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு காவல்துறை சார்பாக ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமமாக இருக்கும். அரசு தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்திருந்த நிலையில்  பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முககவசம் அணிந்து வரச் சொல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்தல் போன்ற விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் வைத்து வாடிக்கையாளர்களை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி 50% வாடிக்கையாளர்களை அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும்.* 


மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.*


 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் திரு. வெற்றி ராஜன் தலைமையில்  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.* 

  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ், தனிப்பிரிவு காவலர் திரு. ஆனந்த கிருஷ்ணகுமார் உட்பட காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட பொருப்பாளர்கள் திரு. ஞானசெல்வம், திரு. ரமேஷ் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...