முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

 


தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

----------------------------

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு  (03.12.2021)   அன்று  செய்தார்கள். அருகில், மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:



தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டதையடுத்து மாநகரின் தாழ்வான பகுதிகளான தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்திநகர், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர் மற்றும் ஐயாவிளை பகுதிகளில் 5 முதல் 30 வரையிலான பல்வேறு நிலையிலான திறன் கொண்ட குதிரை சக்தி  டீசல் மற்றும் மின் மோட்டார்களின் இயக்கநிலையினை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றுவதற்கு கூடுதலாக மின் மற்றும் டீசல் மோட்டார்களை பயன்படுத்த வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டின், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...