முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம்

 






ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 20-03-2022 ஞாயிறு   கிழமை அன்று காலை 11-மணிக்கு  நடைபெற்றது  

ஜனநாயக மக்கள் உரிமை கழக நிர்வன தலைவரும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியருமான டாக்டர் S.சுந்தர்  அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட   ஜனநாயக மக்கள் உரிமை கழக  தலைவர் வழக்கறிஞர்                 திரு .T.J கார்த்திகேயன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

 இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  தொழில் அதிபர்திரு. N. சாமிநாதன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசினார்

மாவட்ட பொருளாளர்வழக்கறிஞர்  திரு. ரமேஷ்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்

கூட்டத்தின் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1. தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கீழ் செய்யபடும் பணிகள் 

ஆமை வேகத்தில் செயல்படுத்தப டுகிறது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளார்கள். இதை போக்கும் விதமாக நமது மாவட்டத்தின் சார்பாக மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் அவர்களை சந்தித்து வேலைகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


2. தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது கழிப்பிட வசதிகள் சரியான கட்டமைப்பில் இல்லாததால் அதை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த  கோரி மாநகர நகராட்சி கமிஷனர்  மற்றும் மேயர் அவர்களிடம் கட்டமைப்பை விரைந்து உருவாக்கித் தரும்படி மனு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


3. நமது  தலைமை கழகத்தின்  உத்தரவின்பேரில் நமது மாவட்டத்தில் 

மாவட்ட தலைவர்

மாவட்ட செயலாளர்

மாவட்ட பொருளாளர்

மாவட்ட அமைப்பாளர்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்

மாவட்ட இணைத் தலைவர்

மாவட்ட இணைச்செயலாளர்

ஆகிய பொறுப்பாளர்களை நமது மாவட்டத்தில் உள்ள  கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் ,தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம், மத்திய மாவட்டம் மற்றும் ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் 

ஒருமாத காலத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


இக்கூட்டத்தில்  தெற்கு மாவட்ட தலைவர் ஜமால்தீன் அவர்கள்கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் லிங்கராஜ் அவர்கள் மற்றும் மத்திய மாவட்டத்தின் நிர்வாகிகள்

L.மதி ராஜன் அவர்கள்,

முருகேசன் அவர்கள் ,R.சுஜய்அவர்கள் ,

p. சண்முகராஜா அவர்கள் , M.மாரியப்பன் அவர்கள்,    T.சந்திரன் அவர்கள், மற்றும்

ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழ் மாவட்ட தலைமை ரிப்போர்ட்டர் E.சிவகாமி நாதன் அவர்கள் கலந்து கொண்டார்கள்

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை K.A. சம்சுதீன்   தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர்   தொழிலதிபர்  அவர்கள்  மற்றும் N. மகாராஜன் அவர்கள் செய்தார்கள்.


ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்  M. கரிகாலன்  (டிராவல் ஏஜென்சி)   அவர்கள் வந்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...