மாநில அளவிலான பென்சாக் சிலாட் போட்டி : சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு



மாநில அளவிலான பென்சாக் சிலாட் போட்டியில் வெற்றி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா. மார்ச் 5 தேதி மற்றும் 6 ஆம் தேதியில் கரூரில் உள்ள சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் மற்றும் ஜூனியர் பென்சாக் சிலாட் போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்  .  இப்போட்டியில்15 தங்கம் 5 வெள்ளி 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற தூத்துக்குடி   வீரர்களுக்கு தூத்துக்குடி இரயில் நிலையத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சாய் இன்டர்நேஷனல் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களையும்  ,பெற்றோர்களையும் பயிற்சியாளர் கபிரியேல் சாலமோன் ,விஜய் ,வேலவன்,  சுடலை கண், சரவண கௌதம், ஹசீனா பேகம் , ஆகியோரை பாராட்டி கௌரவித்தனர். 

விழா ஏற்பாடுகளை சாய் இன்டர்நேஷனல் அகாடமியின் தலைவர் சூர்யா ராம் மற்றும் பயிற்சியாளர்  காஜா ரகுமான் செய்திருந்தார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்