முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

 

      

  ஆழ்வார்திருநகரி  மற்றும் புன்னக்காயல்  ஊராட்சியில்   மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்                              .

-------------------------

 தூத்துக்குடி மாவட்டம்,  ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்                              புன்னக்காயல் ஊராட்சி  திருமண மண்டபத்தில்  (28.04.2022)   அன்று நடைபெற்ற மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் மனுக்கள் பெறும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில்,


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்    புன்னக்காயல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளீர்கள். உங்கள் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கரெக்டா வந்து உங்களுக்கு தெரியாதா

மேலும் புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்களாகிய நீங்கள் நீண்ட காலமாக சாலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சீரமைத்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளீர்கள். மேலும் இப்பகுதியில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் தெரிவித்துள்ளார்கள். இங்குள்ள சாலையை சீரமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் விரைவில் இங்கு போக்குவரத்து அலுவலர் வாயிலாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத ஊராட்சியாக திகழ ஒத்துழைக்க வேண்டும்.  



புன்னக்காயல் கிராமத்தில் நிரந்தர குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளீர்கள். நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சனையை தீர்த்து அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  புன்னக்காயல் ஊராட்சியில் கூடுதல் குடிநீர் திட்டத்தில் ரூ.1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மேலும் புன்னக்காயல் பகுதியில் ஆலை கழிவினால் காற்று மாசு ஏற்பட்டு அதிக நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். நான் ஒரு மருத்துவராக கூறுகிறேன். ஆலை கழிவினாலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். பொதுவாகவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல நோய்கள் உருவாகும். குறிப்பாக மலேரியா, காசநோய் உள்ளிட்ட இணை நோய்கள் ஏற்படுவதினாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நோய்களை கண்டறிந்து அதற்கேற்ற மருத்துவம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே புன்னக்காயல் ஊராட்சியில் விரைவில் மருத்துவ முகாம் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்


அனைவருக்கும் வீடு வழஙும் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளிலும் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. புன்னக்காயல் ஊராட்சியில் 87 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 மீதமுள்ள பட்டாக்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 800 நபர்களுக்கு 2 மாத காலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்களில் 4 பேர் காயலில் விழுந்து உயிருக்கு போராடியபோது புன்னக்காயல் பகுதியை சேர்ந்த ஜேமன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது உயிருக்கு போராடிய 4 பேரை காப்பாற்றினார். இச்செயலை அறிந்தவுடன் நான் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தேன். அதுமட்டுமல்லாமல் வீர தீர சாகசம் செய்தமைக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வீர தீர செயல் புரிந்தமைக்கான விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.புஹாரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.விஸ்வ லிங்கம், திரு.செந்தூர்பாண்டி (பராமரிப்பு), மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ரதிதேவி, வட்டாட்சியர் திரு.முருகேசன், புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஆ.சோபியா,  ஊர் பஞ்சாயத்து தலைவர் திரு.அமலிசன், துறைமுக கமிட்டி தலைவர் திரு.நாதன், அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


.    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...