முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசின் சாதனை குறித்த ‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.

----------------------------

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில், தமிழக அரசின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு, நகர்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஒராண்டு சாதனை மலரை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், வெளியிட, மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்று ஓராண்டிற்குள் தூத்துக்குடி  மாவட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், கொரோனா சிறப்பு நிவாரண உதவிகள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 அத்தியாவசிய மகிளைக் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண நிதியுதவிகள், கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்புப் பணிகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டம், நடமாடும் காய்கறி விற்பனை நிலையம், பனை மேம்பாட்டுத்திட்டம், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டம், சமூக பாதுகாப்புத்திட்டம், திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், திருக்கோயில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், ஓய்வுதியம் உயர்த்தி வழங்கும் திட்டம், திருக்கோயில் புனரமைப்புத் திட்டம், திருக்கோயில் பணியாளர்களுக்கு இரண்டு சீருடை வழங்கும் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைப் பொறியல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த விபரங்கள்.

மேலும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, அமைப்புசாராத் தொழிலாளர்கள், வருவாய்த்துறை, எரிசக்திதுறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை, 


மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை, இ சேவை மையம்,  மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்று ஓராண்டில் பயனடைந்தவர்கள் விபரங்கள் உள்ளடக்கிய அரசின் சாதனை குறித்த கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி திசையெட்டும் மகிழ்ச்சி" என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 


நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன் அவர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.செல்வலெட் சுஷ்மா, துணை மேயர் திருமதி.ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.செல்வக்குமார், மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...