முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

 



தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது

இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் 


அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர் 

இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர்

மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி .சந்தீஷ்  அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் ஜெபா, தமிழ்நாடு காவல்துறை மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜலிங்கம், மற்றும் சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் முருகையா பாண்டியன், சுப்புராஜ் ஞானதுரை ,பாலாஜி, இசக்கி ராஜா ஸ்டீபன் மற்றும் மதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...