கராத்தே வீரருக்கு "வீரக்கலை வித்தகர்" விருது.

 நாசரேத் கராத்தே வீரருக்கு வீரக்கலை வித்தகர் விருது. 



20-10-2022  வியாழக் கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபேரி  கிராமத்தில். . கிராமப்புற தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம்  நடைபெற்றது.

இந்த மாதாந்திர கூட்டத்திற்கு தமிழ் மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்பு உரையாற்ற தமிழ் மன்ற பணியாளர் அரிமா வி.வி.ன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார் . 


தமிழ் மன்றத்தின் சார்பாக  நாசரேத் பகுதியில் உள்ள   மாணவ, மாணவியற் களுக்கு  தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில்  சிறப்பான பயிற்சியளித்து  மாவட்ட, மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க  செய்து , வெற்றியை  பெற செய்த  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் டென்னிசன் அவர்களுக்கு வீரக்கலை வித்தகர்  என்ற விருது வழங்கப்ட்டு  கௌரவிக்கப்பட்டது


 டென்னிசன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக தமிழ் மன்ற பணியாளர் முனைவர் மோசஸ் தயான் நன்றி கூறினார். மூக்கு பேரி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்