முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமனம்.

 தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம்  23-11-2022 புதன், கிழமை  அன்று புதுக்கோட்டையில் சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது. நடைபெற்றது!

மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்!


      புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற   சிறப்பு கூட்டத்திற்கு தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக  கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலையில்

கூட்டத்தில்  நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 29 ஆம் தேதி வணிக வரித்துறை அலுவலகத்தில் டெஸ்ட் ஃபர்ஷேஸ் (சோதனை கொள்முதல்) சம்பந்தமாக திரளான வணிகர்களுடன் சென்று கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மண்டல செயற்குழு கூட்டம் வரும்  டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து சிறப்பாக நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிச. 16 அன்று தூத்துக்குடி புறநகர் பகுதியில் கிளைச்  சங்கங்களில் பேரமைப்பு கொடியேற்றிட முடிவு செய்யப்பட்டது.

டிச. 20 கோவையில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக திரளான வணிகர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.


மேலும் கூட்டத்தில் , தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ்வரன், பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்தபொன்ராஜ், தொகுதிச் செயலாளர் ஏ.ஆனந்தராஜ், மகளிரணி அமைப்பாளர் பி.ராஜம், இளைஞரணி அமைப்பாளர் பட்டு, வ.உ.சி. மார்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், வ.உ.சி. காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சாமி மற்றும் நிர்வாகிகள், 3ஆம் மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள், புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர் மற்றும் நிர்வாகிகள், சேதுபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் திருமால் மற்றும் நிர்வாகிகள், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...