முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ஜனநாயக மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் "மனித உரிமை தின " விழா

 மனித உரிமை தின விழா



தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் மனித உரிமை தின விழா 10 -12 -2012 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி கனி ரெசிடென்சியில்  சிறப்பாக நடைபெற்றது

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு துவங்கிய இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் திரு P. ரமேஷ் B.A B.Lஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார்

தலைமை உரையாக தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர்  வழக்கறிஞர் திரு T.J கார்த்திகேயன் அவர்கள்  தனது உரையில் மாவட்ட ,தாலுகா, ஒன்றிய நிர்வாகிகளிடம் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் நமது அமைப்பின் சார்பாக மக்கள் பணிகளான சட்ட விழிப்புணர்வு மற்றும் மனித உரிமை மீறல் நடைபெறுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகளிடம் விளக்கங்கள் அளித்தார்



தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட செயலாளர்  திரு N. சுவாமிநாதன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் புறவலரும், AVL குரூப் ஆஃப் இன்ஜினியரிங்  MD யுமான திரு A. V .லினோ அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள் 

இந்த நிகழ்ச்சியில் முத்தாய்பாய் சிறப்பு விருந்தினர்களாக சார்பு நீதிபதி, சட்ட பணிகள் ஆணைக் குழுவின் செயலாளருமான   திருமதி  M. ப்ரீத்தா M.L அவர்களும்

T.K.Rஇன்  CEO  T.R. தமிழரசு பிஎஸ்சிBse., M.B.A , M.B.M.அவர்களும்,

வழக்கறிஞர் திரு E அதிசய குமார் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள்

நீதிபதி திருமதி M. ப்ரீத்தா M.L அவர்கள் தனது உரையில் "இந்த அமைப்பைச் சார்ந்த ஒவ்வொருவரும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெறுவதோடு அதை பொதுமக்களிடம் எடுத்து சென்று சொல்வதும் முக்கிய பொறுப்பாகும்

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகளும் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, மனித உரிமை மீறல் போன்றவை நடைபெறாமல் இருக்க சட்ட விழிப்புணர்வு பெறுதல் அவசியம் குறித்து மக்களிடத்தில் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது தங்களது கடமையாக கொள்ள வேண்டும் மேலும் சட்டப்பணிகள் ஆணையத்தின் பணிகள் குறித்தும்    பயன்களைப் பற்றியும் பொதுமக்கள் இலவச சட்ட உதவி பெற ...அதற்கான வழிமுறைகளை பற்றியும்  விளக்கம் அளித்தார்"


இதனை அடுத்து சிறப்புரை ஆற்றிய T.R தமிழரசு அவர்களும் , வழக்கறிஞர் திருE. அதிசய குமார் அவர்களும் கடந்த காலங்களில்  நடந்த மனித உரிமை மீறல் குறித்தும் நாம் ஒவ்வொருவரும் சட்ட விழிப்புணர்வு பெறுதல் அவசியத்தை குறித்து எடுத்துரைத்தார்கள் 





இந்த மனித உரிமை தின விழாவில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் மகளிர் அணி சார்பாக    மண்டல மகளீர் அணி  தலைவி திருமதி இந்திரா ஜெகன் அவர்களும் -   தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி தங்கம் அவர்களும் ,  மற்றும் மகளிர் அணி சார்ந்த உறுப்பினர்களும் - தூத்துக்குடி மாவட்ட  முழுவதிலிருந்தும் ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிர்வாக பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இந்த நிகழ்ச்சியை லயன்ஸ் C. ராஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார்

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட  மாவட்டம் ,மற்றும் ஒன்றிய கிளை பகுதி நிர்வாகத்தினர் அனைவருக்கும்  ஜனநாயக மக்கள்  உரிமைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்


இந்த விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை  திரு மகாராஜன், சம்சுதீன், முருகன், செல்வராஜ், சின்னசாமி ,மதிராஜன்  மாரியப்பன் சுஜய் மற்றும் பலர்  மாவட்ட நிர்வாகத்தோடு  சிறப்பான ஒத்துழைப்பு  வழங்கினார்கள்


தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு எம் கரிகாலன் அவர்கள் நன்றி உரையாற்றினார்  பின்னர் நாட்டுப்பண் இசைக்க விழா நிறைவு பெற்றது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...