ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்




*தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி  ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம் 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி  24.12.2022 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது.



 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலை முத்து அவர்கள் தலைமையிலான ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் திரு. ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்த  முகாமில் ஆயுதப்படையைச் சேர்ந்த 6 பெண் காவலர்கள் உட்பட 50 காவலர்கள் இரத்த தானம் வழங்கினர்.



 இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார் உட்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்