முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர்கள் குழு நடத்திய மெகா கோலப் போட்டி -




தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் நண்பர்கள் குழு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மெகா கோலப்போட்டி  நடத்தி வருகிறார்கள்

அதேபோல் இந்த  வருடமும் நடைபெற்ற இந்த மெகா கோலப்போட்டிக்கான  பரிசு வழங்கும் நிகழ்ச்சி 22-1-2023  ஞாயிற்று கிழமை அன்று  மாலையில் தூத்துக்குடி  38வது வார்டு பகுதியில் உள்ள  குமார தெருவில் நடைபெற்றது

இந்த போட்டிக்கு அரசு மலர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் திரு ஆ ஷேக் மைதீன் அவர்கள் தலைமையில் , தமிழ்நாடு வ. உ. சி மாநில பேரவை தலைவர் திரு. செல்வ மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகிக்க , தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு B. ஐயப்பன் அவர்களும்,மற்றும் மத்திய பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள்  அவர்களும்,  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோல போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்


முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் மற்றும் - மூன்றாம் பரிசாக வெள்ளி நாணயமும், கோலபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுன் விஏஓ திரு ச பரமேஸ்வரி அவர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க செயலாளர் திருமதி J .சேவியர் அம்மாள் அவர்களும், அ.ம.மு.க வின் தூத்துக்குடி  சண்முகபுரம்  பகுதி துணைச் செயலாளர் திருமதி எஸ் விஜயகுமாரி அவர்களும், ராம குணசீலன் அவர்களும் , H.M.S கௌரவத் தலைவர் ஓம் சக்தி M. சங்கர் அவர்களும், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்

நிறைவாக  க. சுப்பையா பாண்டியன், C. முருகன் ஆகியோ நன்றியுரை ஆற்றினார்கள், தூத்துக்குடி 38 ஆவது வார்டு நண்பர்கள் குழு சார்ந்த  B.சங்கரசுப்பு B.A , பாஸ்கர், உரிகுசேன் அலி, பாலா, குமார் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கினார்கள்


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...