காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் காலமானார்

 



தூத்துக்குடி மாவட்டம் : 06.03.2023

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் அவர்கள் சாலை விபத்தில் இன்று காலமானார் - அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் (53) அவர்கள், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள்  சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.

அன்னாரது உடலுக்கு 
(06.03.2023)ன்று   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரை தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்