" பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி "சைக்கிள் மற்றும் வீல் சேர் "பேரணி : டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் துவக்கி வைத்தார் :


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு " பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி " ரோட்டரி  ட்ரையல்ப்ளேசர்ஸ்  சங்கம் " சார்பில் " சைக்கிள் " மற்றும் "வீல் சேர்" பேரணி   நடத்தப்பட்டது

12-03-2023 ஞாயிறு  காலையில் தூத்துக்குடி வ-உ-சி  கல்லூரி முன்பாக புறப்பட்டு தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை வரையிலான இந்த பேரணியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு டி டி ஆர் சிவ சங்கரன் அவர்கள் முன்னிலையில்  Rtn. டாக்டர்  ஜாஸ்மின் ராஜேஷ்   அவர்கள் இந்த பேரணியை துவக்கி வைத்தார்கள்

பெண்கள் பலர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் மாற்றுத்திறனாளி பெண்களும்  சக்கர நாற்காலி பேரணியில்.. ஆர்வத்தோடு பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 


" பெண் குழந்தைகளை காப்போம்" என்பதை வலியுறுத்திய சைக்கிள் பேரணியில்   " ரோட்டரி  ட்ரையல்ப்ளேசர்ஸ்  சங்கம் சார்ந்த  Rtn .Adv.சொர்ணலதா   Rtn. ராஜீவி   Rtn அஜித்தா  Rtn.டாக்டர் ப்ளோரா  ஆகியோர் கலந்துகொண்டு , பேரணியில் கலந்து கொண்ட  மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு  பரிசுகள் வழங்கி ஊக்கம் அளித்து மகிழ்ந்தனர்,இந்த சைக்கிள்பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர்         Rtn மலர்விழி- செயலாளர் Rtn ப்ரதிமா - பொருளாளர் Rtn பிரேமா-  Rtn ரஞ்ஜனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டுச் சங்க செயலாளர் மாஸ்டர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டார் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்