தூத்துக்குடியில் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த திறனாய்வு நிகழ்ச்சி

 




தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து  (19.03.2023) ஞாயிற்று கிழமை அன்று தூத்துக்குடியில்  கலை இலக்கிய நிகழ்ச்சி  நடத்தியது

.   ச.தே.செல்வராசு அவர்கள்  தலைமையில்...    கவிஞர், ஆ.மாரிமுத்து எழுதிய “உளி தீண்டா கல்லோவியம் "  கவிதைத் தொகுப்பும் - சப்திகா டொமிலா எழுதிய “கொடியா...  மரமா” சிறுகதைத் தொகுப்பும், கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய “தேரியாயணம்” நாவலும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு. படைப்புகள் குறித்த திறனாய்வை முறையே  லில்லி மலர், சொ.பிரபாகரன், மி.சு.எழிலரசி ஆகியோர் முன்வைத்தனர். . படைப்பாளர்கள் மூவரும் தங்களது ஏற்பரையை நிகழ்த்தினார்கள்.



நிகழ்வில் ஆகம் கலைக்குழு, தொன்பாஸ்கோ இளையோர் இயக்கம் மற்றும் ஆழி கலைக்குழுக்களின் மூன்று குறு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாடகங்கள் குறித்த தங்களது பார்வையை எம்.எம்.தீன், லட்சுமி விசாகன்  உள்ளிட்டோர் சுருக்கமாக முன்வைத்தனர். "ஔவை காலத்தில் சமூகம்" என்ற தலைப்பில் தங்கத்துரையரசி  சிறப்புரையாற்றினார். நிகழ்வை தொடுவானம் அமைப்பின் தலைவர் நெல்லை தேவன் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பாக லட்சுமி விசாகன் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகங்களும் சமகால அரசியல் சூழலைப் பகடி செய்ததோடு அரசியல் குறித்து வெகுமக்களுக்கு கற்பிப்க்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் . தொடுவானம் கலை இலக்கியப் பேரவை நிகழ்ச்சியை  வெகு சிறப்பாக வடிவமைத்து நடத்தியது . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், த.மு.எ.சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்து கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள். முத்துநகரில் இத்தகைய ஒரு சிறப்பான இலக்கிய நிகழ்ச்சி  அடுத்தடுத்து  நடத்திட வேண்டும் என்பது இலக்கிய ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது  










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்