முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பாக நூல் வெளியீடு

தொடுவானம் கலை இலக்கிய பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா







7. 5 .2023 ஞாயிற்றுக்கிழமை மாலை தூத்துக்குடி "பாம்ஸ் அகாடமி" அரங்கத்தில் வைத்து தொடுவானம் கலை இலக்கிய பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் இணைந்து நூல் வெளியீட்டு விழா நடத்தியது

 இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அன்னம் காலண்டிதழ் ஆசிரியர் பணி. ச. தே. செல்வராசு அவர்கள் தலைமையில் கவிஞர் மாரிமுத்து அவர்கள் எழுதிய நேச குளத்தில்" தினமொரு கல் " என்ற கவிதை புத்தகத்தை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்ந்த திரு விசாகன் அவர்கள் கவிதையின் முதல் படிப்பை வெளியிட அதை மூக்கு பேரி கிராமப்புற தமிழ் மன்றத்தின் தலைவர் கவிஞர் தேவர் நேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

 


 







பின்னர் வெளியிடப்பட்ட கவிஞர் மாரிமுத்து அவர்களின் "நேச குளத்தில் தினமொரு  கல் " என்ற கவிதை நூலை பற்றி ஊத்துமலை சார்ந்த பட்டதாரி தங்க துரையரசி அவர்களும்  அடுத்து முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி லில்லி மலர் அவர்களும்  திறனாய்வு செய்து திறனாய்வு உரை நிகழ்த்தினார்கள்


இதனைத் தொடர்ந்து  அடுத்த நிகழ்ச்சியாக தொடுவானம் இலக்கிய இதழின் ஆசிரியரும் தொடுவானம் கலை இலக்கிய பேரவையின் தலைவருமான எழுத்தாளரும் கவிஞர். திரு. நெல்லைத்தேவன் அவர்கள் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் அடங்கிய சுமை கூலி என்ற நூலை செய்திங்கநல்லூர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் முதல் படியை வெளியிட நாசரேத்தைச் சார்ந்த தேதிய எழுத்தாளர் திரு கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.





  வெளியிடப்பட்ட நெல்லைதேவன்  அவர்கள் எழுதிய  "சுமை கூலி" நூலைப்பற்றி, தூய மரியன்னை பெண்கள் கல்லூரி சார்ந்த முனைவர் அருட் சகோதரி மீ. க. எழிலரசி அவர்கள் திறனாய்வு செய்து திறனாய்வு உரை நிகழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் திரு முகமது யூசுப் அவர்கள் "சுமை கூலி"  நூலை பற்றி திறனாய்வு செய்து உரை நிகழ்த்தினார்கள்

பின்னர் தூத்துக்குடி முனைவர் ச அருள்மணி அவர்கள்,  தூத்துக்குடி திரு.ஏ செல்வராஜ் அவர்கள் , எழுத்தாளர் தூத்துக்குடி தெரு சங்கீதா முருகன் அவர்கள், கவிஞர் வருணன் அவர்கள், காதை களம் தூத்துக்குடி திரு அன்பரசு அவர்கள்,  வீதி நாடகக் கலைஞர் திரு பி சக்திவேல் அவர்கள் , தூத்துக்குடி ஆகம் கலையகம் சார்ந்த திரு ஆர் கார்த்திக் அவர்கள், நமது  "எழுத்தாணி" youtube சார்ந்த  E.சிவா அவர்கள், தமிழன் தொலைக்காட்சியின் நிருபர் திரு ரவி அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

பின்னர்  "நேச குளத்தில்தினமொரு கல்" நூலாசிரியர் கவிஞர் மாரிமுத்து அவர்கள் மற்றும் " சுமை கூலி" நூல் ஆசிரியர் கவிஞர் நெல்லை தேவன் அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்

இநத நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர்கள்  - கவிஞர்கள் மற்றும்  இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்தனர்.   வருகை தந்த அனைவருக்கும் தொடுவானம் இலக்கிய பேரவையின் சார்பாக பொன்னாடை  போர்த்தி மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

 நிகழ்ச்சியின் நிறைவாக கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்கள் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி  நிறைவு பெற்றது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...