கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டருக்கு கலை வளர்மணி” பட்டம்


 சிறந்த சிலம்பாட்டக் கலைஞர், “ கலை வளர்மணி” பட்டத்தை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் வழங்கினார்.


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த சிலம்பாட்டக் கலைஞர் மற்றும் சிறப்பு விருதுக்குரிய “ கலை வளர்மணி ” என்ற பட்டத்தையும் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பப் பள்ளி  சிலம்பம் மற்றும் கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் விருது வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்

.இந்நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் மற்றும் பணமுடிப்பு போன்றவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்