நாசரேத்தில் 14 வது மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி



நாசரேத்தில்  மாவட்ட  அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி நடைபெற்றது.

நாசரேத்தில் 14 வது   மாவட்ட  அளவிலான கராத்தே  மற்றும் சிலம்ப போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு  ஊர்களிலிருந்து  இருந்து மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர் இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி,  திருச்செந்தூர், நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம்,    போன்ற ஊர்களில் உள்ள மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர். இந்தப் போட்டி இரண்டு வகையாக நடைபெற்றது கட்டா மற்றும் குமட்டி என்ற பிரிவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த  அப்போலோ குரூப் ஆப் கம்பெனி சட்ட ஆலோசகர் திரு .பூமி கிங்ஸ்லி ,  உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் திரு. விவின்  மற்றும் நாசரேத்    மர்காசியஸ்  பள்ளி இயற்பியல் ஆசிரியர்   ஜெர் சோம் ஜெபராஜ்  கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் போட்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கராத்தே மாஸ்டர்  ராமசாமி,  காளி ராஜ், சபரி ,குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்