முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா

பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா

டிசம்பர் மாதம் வந்ததும் நினைவில் வருவது கிறிஸ்து பிறப்பு விழா தான். அவ்வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவராலும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் விழா கச்சனாவிளை குழந்தைகள் காப்பகத்தில் 06-12-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இறைவேண்டலுடன் நிகழ்ச்சி துவங்க, பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மைக்லின் மேரி வரவேற்க, பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை பென்சிகர்லூசன் தலைமை தாங்கினார்.

காப்பகத்துக்கு குழந்தைகள் மகிழும்படியான நடனங்கள், பாடல்கள் நாடகங்கள் என கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி, அனைவருக்கும் உணவு பரிமாற விழா இனிதே நிறைவுற்றது.

சுமார் 75 குழந்தைகள் உள்பட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இல்லத்து அருட்சகோதரிகள் நன்றி கூறினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பல்சமய உரையாடல் பணிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...