கதைசொல்லல் கலையின் அறிமுகம்

 தூத்துக்குடியில் கலையின் குரல்   அமைப்பின் சார்பில் '(25-01-2026) அன்று காலை "கலை_அறிவோம்" நிகழ்வில் - கதைசொல்லல் கலையின் அறிமுகம்..., மில்லர்புரம் புரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.



நிகழ்வின் தொடக்கமாக பறைப் பயிற்சி மாணவி ம.மகாலெட்சுமி அவர்கள் பாடலுடன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். 



தொடர்ந்து கதை சொல்லல் கலையின் அறிமுகம்,  வரலாறு மற்றும் கதை சொல்லல் சிறார்களுக்கு எவ்வளவு அவசியம் என்றும் கதைகளை சொல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள், கதை பின்னல் போன்ற பயிற்சிகளை  தோழர் சு.லெட்சுமி விசாகன் அவர்கள் சிறப்பாக வழங்கினார்.



தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் தா.செல்வராஜ் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களை வாழ்த்தி கவிதை வாசித்து சிறப்பித்தார்.


தொடர்ந்து எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் அவர்கள் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி திரு. செய்யது முஹம்மது செரிப்  அவர்கள் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 

தொடர்ந்து இலக்கிய ஆர்வலர் திரு.து.பத்மநாதன் அவர்கள் கலையின் குரல் அமைப்பின்  கலைச் செயல்பாடுகள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 

 

நிறைவாக கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.


நிகழ்வில் திரு.செல்வின், திரு.இளமுருகு, திரு பட இயக்குனர் சோ.அருந்ததி அரசு, குமிழ்முனை சைமன், எழுத்தாளர் நெல்லை தேவன், எழுத்தாளர் ஏ.சாந்தி பிரபு,  செய்தியாளர் சிவா, காதைக்களம் ஒருங்கிணைப்பாளர் அன்புகுமார், பகுஜன் லூயிஸ், ஆசிரியர் பிரபாவதி, மரிய சேவியர் மெத்தோடியஸ் ஆகியோரோடு மாணவ மாணவிகள் பலரும் இந்த பயிற்சியில்  கலந்து கொண்டு பயன்பெற்று சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்