இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 தூத்துக்குடி S.A.V.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி : தூத்துக்குடி, S.A.V.மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலை மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளித் தலைமை ஆசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக Army Recruitment Office யை சார்ந்த சுபேதார் திரிபாதி (Army Recruitment Office, ARO -Tiruchi.), கார்த்திகேயன் (Civil Defence Staff) கொண்டு இராணுவத்தில் சேர்வதற்கான கல்வி மற்றும் உடல் தகுதி விதிமுறைகள், பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் விதமாகவும், இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாகவும் இருந்தது.

நிகழ்ச்சி நிறைவில் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவர்க்கும் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்