தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல்வாழ்வு சங்கம் சார்பாக "தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு"




தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது.

அதில் "தமிழ்நாடு அரசு மகளிர்க்காக பல புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்து செயலாற்றி வருகிறீர்கள்.

குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விடியல் பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம் மகளிர் மாணவிகளுக்கான கல்லூரிகளைத் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை தாங்கள் செயலாற்றி வருகிறீர்கள்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை விதவைப் பெண்கள் குடியிருக்க வீடு இல்லாமல் மிகவும்கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.

  ஏழை விதவைகளுக்கு, இலவச பட்டா அல்லது குடிசை மாற்று வாரியம் -  தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகளில்.... இலவசமாக அல்லது குறைந்த வாடகையில் வீடுகள்  ஒதுக்கி தர  உத்திரவிடுமாறு. தூத்துக்குடி மாவட்ட  கைம்பெண் நல வாழ்வு  சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட தலைவி R.சங்கீதா ரமேஷ் அந்த மனுவில்  கேட்டுக் கொண்டுள்ளார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்