முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைப்பு .



தூத்துக்குடி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம்  நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

-------------------------


       கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடைபராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 06.01.2022 முதல் 10.01.2022 வரை அறிஞர் அண்ணா திருமணமண்டபம்,சத்திரம் தெரு, 1-ம் கேட் அருகில், தூத்துக்குடியில் வைத்து நடைபெற இருந்தது.


        தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடப் பட்டுள்ளது.


        அதனடிப்படையில் சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதன் காரணமாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 06.01.2022 முதல் 10.01.2022 வரைநடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. 


         கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைபராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 06.01.2022 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளின்படி தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் எவரும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும் நேர்காணல் குறித்து புதியதேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 


கருத்துகள்

  1. What is a sports toto? - Sporting 100
    Sportsbooks have a wide 토토사이트 variety of betting options, including pre-match, and in-play, betting events and live odds across all sports.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...