தூத்துக்குடி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
-------------------------
கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடைபராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 06.01.2022 முதல் 10.01.2022 வரை அறிஞர் அண்ணா திருமணமண்டபம்,சத்திரம் தெரு, 1-ம் கேட் அருகில், தூத்துக்குடியில் வைத்து நடைபெற இருந்தது.
தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடப் பட்டுள்ளது.
அதனடிப்படையில் சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 06.01.2022 முதல் 10.01.2022 வரைநடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைபராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 06.01.2022 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளின்படி தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் எவரும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும் நேர்காணல் குறித்து புதியதேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
What is a sports toto? - Sporting 100
பதிலளிநீக்குSportsbooks have a wide 토토사이트 variety of betting options, including pre-match, and in-play, betting events and live odds across all sports.