முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்


தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். 

அதன் போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார்.

இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தி, ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் மிஷின்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த தையல் இயந்திரங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார்.


ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு, உதயநிதி ஸ்டாலின், உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க உதவினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முயற்சியும் ஏற்பாட்டிலும் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது.

அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில்ச மூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி கீதா ஜீவன்  மீன் வளம் மீனவர் நலன் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் ஜோயல், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா விளாத்திகும்ளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை ஜேகே ஜஸ்டின் கடைக்கு வருகை புரிந்து நலத்திட்டங்களை வழங்கியது சிறப்புமிக்கது

. ஜே கே ஜஸ்டின், மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கியிருக்கிறார். தையல் இயந்திரங்களும் மூன்றாவது முறையாக வழங்கியிருக்கிறார். தமிழக துணை முதல்வர் வருகை புரிந்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...