போர்ட் சிட்டி வெல்ஃபேர் ஆசோசியேசன் கூட்டம்
15-10-2026 வியாழன் அன்று மாலை ஹாலில் நடை பெற்றது இந்தக் கூட்டத்திற்கு பணி நிறைவு பெற்ற கருவூலத்துறை கூடுதல் இயக்குனர் துறை கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார் . துறையில் பணி நிறைவு பெற்ற திரு கே சண்முகவேல் போக்குவரத்து துறையில் பணி நிறைவு பெற்ற ஆகியோர் முன்னிலை வகித்தனர் நில அளவைத் துறையைச் சார்ந்த பணி நிறைவு பெற்ற கண்காணிப்பாளர் டி சிவசுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார் விழாவில் இந்த நிகழ்ச்சியில் போர்ட் சிட்டி பெனிஃபிட் பண்ட் செயல் இயக்குனர் திரு எஸ் விக்னேஷ் சூரியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அசோசியேசன் செயல்பாடுகளை குறித்து பாராட்டி பேசினார் பொதுப்பணித்துறையில் பணி நிறைவு பெற்ற உதவி செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார் இந்த கூட்டத்தின் தீர்மானங்கள். தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி முடிவடைந்து விட்டதால் தூத்துக்குடியில் இருந்து நேரடியாக டெல்லி மும்பை கல்கத்தா மற்றும் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீர்மானிக...