போர்ட் சிட்டி வெல்ஃபேர் ஆசோசியேசன் கூட்டம்
நில அளவைத் துறையைச் சார்ந்த பணி நிறைவு பெற்ற கண்காணிப்பாளர் டி சிவசுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்
விழாவில் இந்த நிகழ்ச்சியில் போர்ட் சிட்டி பெனிஃபிட் பண்ட் செயல் இயக்குனர் திரு எஸ் விக்னேஷ் சூரியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அசோசியேசன் செயல்பாடுகளை குறித்து பாராட்டி பேசினார்
பொதுப்பணித்துறையில் பணி நிறைவு பெற்ற உதவி செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்
இந்த கூட்டத்தின் தீர்மானங்கள்.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி முடிவடைந்து விட்டதால் தூத்துக்குடியில் இருந்து நேரடியாக டெல்லி மும்பை கல்கத்தா மற்றும் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது
தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் தூத்துக்குடியில் இருந்து வந்தே பார்த் ரயில் இயக்க பட வேண்டும். இது சம்பந்தமாக ரயில் வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது
தூத்துக்குடியை புறப்படும் இடமாக கொண்டு மதுரைக்கு செல்லும் பேருந்துகளை கூடுதலாக இயக்கபட வேண்டும். தறபோது பெரும்பாலன பேருந்துகள் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதுரை- திருச்சி : சேலம் - கம்பம்- தேனி- திருப்பூர் -கோவை - போன்ற ஊர்களுக்கு செல்கின்றன இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பவும்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிதமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பவும் போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது







.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக