அகில உலக தேசிய ஒற்றுமை தினம் முன்னிட்டு சிறப்புப் போட்டிகள்
அகில உலக தேசிய ஒற்றுமை தினம் முன்னிட்டு சிறப்புப் போட்டிகள்
28.10.2026 புதன் கிழமை அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக புதன்கிழமை அன்று தூத்துக்குடி, பத்திநாதபுரத்தில் உள்ள நற்செய்தி நடுவத்தில் வைத்து தூத்துக்குடி நகரப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
பிற்பகல் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது . தொடர்ந்து ஒவ்வொரு சமயத்தில் உள்ள திருநூல்களும், திருக்குறளும் மாணவ, மாணவியர்களால் வாசிக்கப்பட்டது.
திரு. மா.தங்கையா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பல்சமய உரையாடல் பணிக்குழுச் செயலர் தந்தை அருள்பணி. பென்சிகர் லூசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, வந்திருந்த நடுவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அருள்சகோ. ஜெஸி, மேனாள் பேராசிரியர், மரியன்னைக் கல்லூரி, திருமதி. பர்வீன் சுல்தானா, பேராசிரியர், மரியன்னை கல்லூரி, திரு. சம்சுதீன் ரியாஜி, ஏ.கே. மகளிர் அரபிக் கல்லூரி ஆகியோர் நடுவர்களாக வருகைத் தந்திருந்தார்கள். அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கொளரவ படுத்தப்பட்டது.
பின்னர் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் தொடங்கப்பட்டு போட்டிக்கான மதிப்பீடுகள் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது அமர்வு மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பள்ளிகளில்
மொத்தம் 14 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்சமய தோழர்கள் என 110 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று பேருக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழும், புத்தகமும் வழங்கப்பட்டது.
திரு. மின்னல் அம்ஜத் அவர்கள் நன்றியுரை கூறினார்கள். அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அருள்பணி. பென்சிகர் லூசன் அவர்களுடன் இணைந்து நற்செய்தி நடுவப் பணியாளர்களும் மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுத் தோழர்களும் செய்திருந்தார்கள். திரு. சுதந்திரராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். போட்டிக்கான பரிசுகளை நல்உள்ளம் கொண்ட தன்னார்வளர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.






கருத்துகள்
கருத்துரையிடுக