இடுகைகள்

நேபாலில் நடைபெற்ற கராத்தே போட்டி:யில் வெற்றி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு

படம்
3-9-2024 அன்று நேபால் நாட்டில்  நடைபெற்ற சர்வதேச அளவிலான  கராத்தே போட்டியில் நாசரேத்  ஆலன் திலக் கராத்தே  பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.   நேபால் நாட்டில்   உள்ள  போகுதா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில்  நேபால்,  இந்தியா, இலங்கை, மலேசியா,  போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்தப் போட்டியில்  நாசரேத்  ஆலன் திலக்  கராத்தே பள்ளி மாணவன் ஆலன் சண்டை  55 கிலோ பிரிவில் முதலிடமும்,   50 கிலோ  சண்டை பிரிவில் சதீஷ்  முதலிடமும் பெற்று  சாதனை படைத்தனர்.   இந்த மாணவர்களை அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள்  மாணவர்கள் மற்றும்  பயிற்சி அளித்த  மாஸ்டர் கராத்தே டென்னிசன்  ஆகியோர் பாராட்டினார்.

சாயர்புரம் ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு விருது

படம்
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட  விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.   இந்த  விருது  திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் டீன் பேராசிரியர்  டாக்டர் .செண்பக விநாயகமூர்த்தி  அவர்கள்   டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல் முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த்  அவர்களுக்கு வாழ்த்தி  விருது  வழங்கினார்.   இந்த நிகழ்ச்சிக்கு  திருநெல்வேலி அண்ணா   பல்கலைக்கழக ரீஜனல் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் .ஜெயந்தி,  அண்ணா பல்கலைக்கழக நாட்டு  நல பணி திட்ட அலுவலர்  பேராசிரியர் மதுமதி  டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர்  மற்றும் நாட்டு நலப்பணி அலுவலர் டென்னிசன் கலந்து  கொண்டனர்

நாசரேத்தில் 14 வது மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி

நாசரேத்தில்  மாவட்ட  அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி நடைபெற்றது. நாசரேத்தில் 14 வது   மாவட்ட  அளவிலான கராத்தே  மற்றும் சிலம்ப போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு  ஊர்களிலிருந்து  இருந்து மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர் இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி,  திருச்செந்தூர், நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம்,    போன்ற ஊர்களில் உள்ள மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர். இந்தப் போட்டி இரண்டு வகையாக நடைபெற்றது கட்டா மற்றும் குமட்டி என்ற பிரிவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த  அப்போலோ குரூப் ஆப் கம்பெனி சட்ட ஆலோசகர் திரு .பூமி கிங்ஸ்லி ,  உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் திரு. விவின்  மற்றும் நாசரேத்    மர்காசியஸ்  பள்ளி இயற்பியல் ஆசிரியர்   ஜெர் சோம் ஜெபராஜ்  கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் போ...