இடுகைகள்

காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டி : இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு

படம்
 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில்; வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  கடந்த 06.01.2022 முதல் 09.01.2022 வரையில், திருச்சி ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கத்தில் தமிழக காவல்துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையே கபடி, கையூந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, கொகொ மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  இப்போட்டியில் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ மற்றும் சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் கூடைப்பந்து போட்டியில் தெற்கு மண்டலம் சார்பாக 12 காவல்துறையினர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து கேடயம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளனர்.  இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மத்தியபாகம் காவல்நிலைய...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயார் மறைவு

படம்
நமது எழுத்தாணி சார்பாக  ஆழ்ந்த இரங்கல்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வ திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக் அம்மாள் அவர்கள்  17- 01 -2022  இன்று காலையில் காலமானார்  அன்னாரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கில  நத்தத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்பதோடு தூத்துக்குடி   மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது  " நமது எழுத்தாணி" சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

இன்று ஊரடங்கு : வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு,

படம்
 ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.  தற்போது பரவி வரும் ஒமைக்ரான் கொரோன பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று (16.01.2022) ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; 68 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (16.01.2022) குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுரக...

அனைவருக்கும் "நமது எழுத்தாணி "யின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

படம்
 

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி தூத்துக்குடி வருகை

படம்
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி தூத்துக்குடி வருகை           10 1 2022    திங்கட்கிழமை  இன்று நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வருகை தந்துள்ள  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், மாநில  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவருமான  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்கள் வருகை தந்துள்ளார் வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர்  அவர்கள் தலைமையில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது   இந்த வரவேற்பு நிகழ்வில்    தூத்துக்குடி மாவட்ட   இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாவட்ட துணைச் செயலாளர்  " மின்னல் அம்ஜத்" , பிரைன் நகர் கிளை தலைவர் அப்துல் மஜீத் ,  ஷாஃபி, கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புசாரா கட்டுமான தலைவர் ,  முடுக்குகாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  முருகேசன்  , இந்திய யூனியன...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடிவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அன்று (08.01.2022) ஒமைக்ரான்; கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்க...

காவல்துறை சார்பாக , " ஒமிக்ரான் கொரோனா" ! பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு

படம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஒமிக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கி, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (07.01.2022) விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கி, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  10 அவர் பேசுகையில், மேலும் தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்...