இடுகைகள்
குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. ---------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் இன்று (24.01.2022) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2022 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் ம...
காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டி : இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில்; வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கடந்த 06.01.2022 முதல் 09.01.2022 வரையில், திருச்சி ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கத்தில் தமிழக காவல்துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையே கபடி, கையூந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, கொகொ மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ மற்றும் சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் கூடைப்பந்து போட்டியில் தெற்கு மண்டலம் சார்பாக 12 காவல்துறையினர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து கேடயம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மத்தியபாகம் காவல்நிலைய...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயார் மறைவு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நமது எழுத்தாணி சார்பாக ஆழ்ந்த இரங்கல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வ திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக் அம்மாள் அவர்கள் 17- 01 -2022 இன்று காலையில் காலமானார் அன்னாரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்பதோடு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது " நமது எழுத்தாணி" சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது
இன்று ஊரடங்கு : வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு,
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் கொரோன பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று (16.01.2022) ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; 68 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (16.01.2022) குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுரக...
அனைவருக்கும் "நமது எழுத்தாணி "யின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி தூத்துக்குடி வருகை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி தூத்துக்குடி வருகை 10 1 2022 திங்கட்கிழமை இன்று நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவருமான அல்ஹாஜ் நவாஸ்கனி அவர்கள் வருகை தந்துள்ளார் வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவாஸ்கனி அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர் அவர்கள் தலைமையில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது இந்த வரவேற்பு நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் " மின்னல் அம்ஜத்" , பிரைன் நகர் கிளை தலைவர் அப்துல் மஜீத் , ஷாஃபி, கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புசாரா கட்டுமான தலைவர் , முடுக்குகாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முருகேசன் , இந்திய யூனியன...