இடுகைகள்

எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் - போதைபொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு " மினி மராத்தான் "

படம்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்"    (ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs)   என்ற அடிப்படையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று 22.01.2023   அன்றுகாலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். 6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர...

நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா

படம்
  தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாசரேத் திருவள்ளுவர் காலனி மற்றும் ரயில்வே நிலையம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேஷ்டிகள் மற்றும் இனிப்புகள்  வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு கழக பிரமுகர் பெரியதுரை, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் துணைத் தலைவர் பிரபு,3 வது வார்டு செயலாளர் சரவணன், மோகன்ராஜ், நகர பொருளாளர் ராஜேந்திரன், செல்வராஜ், ஆதியப்பன், துரைசாமி, சிகாமணி,  ராமசாமி,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு  12 வது வார்டு கவுன்சிலர் மற்றும்  வார்டு செயலாளர் ரவீந்திரன் செய்திருந்தார்.

நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

படம்
  நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம். 14 - 1 -2023 சனிகிழமை அன்று  காலையில் , தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில்  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக நாசரேத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். புது பானையில்  மாணவ மாணவிகளால்  பொங்கல்  விடப்பட்டது.  அனைத்து சிலம்ப மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகத்தோடு கொண்டாடினர்.  பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அஇஅதிமுக வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. சமத்துவ பொங்கல்

படம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று (14.01.2023) காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார். அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.   இவ்விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பா...

தை பொங்கல் திருநாள்

படம்
 

தூத்துக்குடியில் ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்

படம்
 ஒவ்வொரு வருடமும் அகத்தியர் பிறந்த தினமான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பாக , தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவின் சார்பாக ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்  2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று தூத்துக்குடி காந்தி நகர் இந்து  அரிஜன துவக்க பள்ளியில் கொண்டாடப்பட்டது.   இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக தலைவர் திரு ராமசாமி, பள்ளி செயலாளர் திரு M.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் C.K. கே ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,  இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக  தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளி குழந்தைகள் பாட,   குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட தலைமை  சித்த மருத்துவ அலுவலர்  திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வுக்கான நெறிமுறைகளை எடுத்துக் க...

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 4 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞர் : தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாராட்டு

படம்
  குற்றால அருவியில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை தனது உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த இளைஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டு.         கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 29.12.2022 அன்று தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது அவரது மகளான 4 வயது சிறுமி தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான செல்வராஜ் மகன் விஜயகுமார் (24) என்பவர் விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.          அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டப...