இடுகைகள்

முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

படம்
 முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு - போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள்  மாவட்ட எஸ்.பி  எச்சரிக்கை.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (16.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.   அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்ப...

தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் 74வது சுதந்திர தின விழா

படம்
         தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74வது சுதந்திர தின  விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  தேசிய கொடியினை ஏற்றி வைத்து 222 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கேவியட் 19 பணிகளில்  சிறப்பாக பணியாற்றிய 114 அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.  ------------------------------------------------------------------------------------------------------------   தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் 74வது சுதந்திர  தின விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் (15.08.2020)   நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவாக் ள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாh.; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் ;, இ.கா.ப.,  அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப்புறா மற்றும்...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

படம்
 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி போக்கு வரத்து காவல் துறைக்கு 100 தடுப்புகள் ( பேரி கார்டுகள் )

படம்
14-08-2020   தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (பேரிகார்டுகள் )   வழங்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு முதற்கட்டமாக 100 தடுப்புகளை ( பேரிகார்டுகள்) இன்று குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை பிரிவுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் திரு. சுரேந்திரன், மண்டல மேலாளர் திரு. மோகன்ராஜ், முதுநிலை மேலாளர்கள் குமரேசன் மற்றும் முருகேசபாண்டி ஆகியோர் ஒப்படைத்தனர். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தடுப்புகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும, அதனை எதிர்கொ...

கரோனா தொற்று பணியினை தைரியத்தோடும் அர்பணிப்போடு எதிர் கொண்டு மீண்ட காவலர்கள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு:

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து  மீண்டு  பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரபா, முதல் நிலைக் காவலர் திருமதி. ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம்; காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. சொர்ணராணி, சிறப்பு உதவி ஆய்வளார் திரு. பிள்ளைமுத்து, முதல் நிலை பெண் காவலர் திருமதி. திருவரங்கசெல்வி, காவலர் திரு. நித்தியானந்தன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் திரு. மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் திரு. சேரந்தையன், சிப்காட் காவல் நிலைய உதவி...

காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

படம்
இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் காரணங்கள் கேட்டறிந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, கபசுரக்குடிநீர் வழங்கினார்.    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.   அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி ...

தூத்துக்குடியில் திருடு போன 11 லட்சம் மதிப்பிலானா நகைகள் கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு

படம்
தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடு;போன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31), ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் ஸ்பிக் குடியிருப்பில் "சி" பிளாக்கில் வசித்து வருகிறார். இந்நிலையில் 26.03.2020 அன்று மாலை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் தனது மனைவி ஜேசு சகாயம் மோனிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே எங்கோ ஒரு இடத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்.   சென்றவர்கள் மறுநாள் மாலை வீடு திரும்பியபோது சாவி இல்லாததால், இன்னொரு சாவியை வைத்து திறந்து வீட்டிலிருந்துள்ளார். அதன் பின்னரே வீட்டிலிருந்த சுமார் 40 பவுன் நகைகள் களவு போயுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே 28.03.2020 அன்று வின்ஸ்டன் அந்தோ...