இடுகைகள்

வூசு வீர சாகச போட்டியில் சாகசம் புரிந்த பள்ளி சிறுமி

படம்
 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

படம்
  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். -------------------------- தூத்துக்குடியில் போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து தலைக்கவசங்கள் வழங்கினோம்.  கடந்த மாதம் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த மாதம் கார், பேருந்து என அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகா...

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம்

படம்
  ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 20-03-2022 ஞாயிறு   கிழமை அன்று காலை 11-மணிக்கு  நடைபெற்றது   ஜனநாயக மக்கள் உரிமை கழக நிர்வன தலைவரும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியருமான டாக்டர் S.சுந்தர்  அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட   ஜனநாயக மக்கள் உரிமை கழக  தலைவர் வழக்கறிஞர்                 திரு .T.J கார்த்திகேயன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது,  இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  தொழில் அதிபர்திரு. N. சாமிநாதன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசினார் மாவட்ட பொருளாளர்வழக்கறிஞர்  திரு. ரமேஷ்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1. தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கீழ் செய்யபடும் பணிகள்  ஆமை வேகத்தில் செயல்படுத்தப டுகிறது. இதனால் மக்கள் பெரு...

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு

படம்
 2021-2022 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான       (UYEGP)    (PMEGM)  வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (Pஆநுபுஆ) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், ஆவின் திட்டங்களுக்கு சிறப்பு முகாம் வருகின்ற 25.03.2022 அன்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் ககலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------- தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.03.2022) துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடை...

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7500 கோடியில் 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டம்

படம்
செவ்வாய் 15, மார்ச் 2022  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடியில், 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் பீமல்குமார், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர்  பிரசன்னா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், இந்திய துறைமுக ரயில்  கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண...

உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு

படம்
  உக்ரைன் நாட்டிலிருந்து இராமநாதபும் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை                                மாண்புமிகு  சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள்,              மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்                     ஆகியோர் வரவேற்றார்கள் ----------------------- தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று (13.03.2022) வரவேற்றார்கள்.  இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம...