இடுகைகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள்

படம்
 சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர். சிங்கப்பூரில் செயின்ட் ஜார்ஜ் அவன்யூலில்   நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில்  சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா ,போன்ற நாடுகளில் இருந்து  180   கலந்து கொண்டனர்.  இந்தப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் , சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன்  சிறப்பான பயிற்சிகளை அளித்துள்ளார்    தாயகம்  திரும்பி  திருச்செந்தூர் வந்தடைந்த வெற்றி பெற்ற வீரர்களுக்கு   திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்று மாணவ மாணவிகளையும் மற்றும் மாஸ்டரையும் வாழ்த்தி பாராட்டினார்கள்  

நண்பர்கள் குழு நடத்திய மெகா கோலப் போட்டி -

படம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் நண்பர்கள் குழு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மெகா கோலப்போட்டி  நடத்தி வருகிறார்கள் அதேபோல் இந்த  வருடமும் நடைபெற்ற இந்த மெகா கோலப்போட்டிக்கான  பரிசு வழங்கும் நிகழ்ச்சி 22-1-2023  ஞாயிற்று கிழமை அன்று  மாலையில் தூத்துக்குடி  38வது வார்டு பகுதியில் உள்ள  குமார தெருவில் நடைபெற்றது இந்த போட்டிக்கு அரசு மலர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் திரு ஆ ஷேக் மைதீன் அவர்கள் தலைமையில் , தமிழ்நாடு வ. உ. சி மாநில பேரவை தலைவர் திரு. செல்வ மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகிக்க , தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு B. ஐயப்பன் அவர்களும்,மற்றும் மத்திய பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள்  அவர்களும்,  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோல போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள் முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் மற்றும் - மூன்றாம் பரிசாக வெள்ளி நாணயமும், கோலபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்...

எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் - போதைபொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு " மினி மராத்தான் "

படம்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்"    (ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs)   என்ற அடிப்படையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று 22.01.2023   அன்றுகாலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். 6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர...

நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா

படம்
  தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாசரேத் திருவள்ளுவர் காலனி மற்றும் ரயில்வே நிலையம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேஷ்டிகள் மற்றும் இனிப்புகள்  வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு கழக பிரமுகர் பெரியதுரை, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் துணைத் தலைவர் பிரபு,3 வது வார்டு செயலாளர் சரவணன், மோகன்ராஜ், நகர பொருளாளர் ராஜேந்திரன், செல்வராஜ், ஆதியப்பன், துரைசாமி, சிகாமணி,  ராமசாமி,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு  12 வது வார்டு கவுன்சிலர் மற்றும்  வார்டு செயலாளர் ரவீந்திரன் செய்திருந்தார்.

நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

படம்
  நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம். 14 - 1 -2023 சனிகிழமை அன்று  காலையில் , தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில்  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக நாசரேத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். புது பானையில்  மாணவ மாணவிகளால்  பொங்கல்  விடப்பட்டது.  அனைத்து சிலம்ப மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகத்தோடு கொண்டாடினர்.  பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அஇஅதிமுக வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. சமத்துவ பொங்கல்

படம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று (14.01.2023) காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார். அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.   இவ்விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பா...

தை பொங்கல் திருநாள்

படம்