இடுகைகள்

பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா

படம்
பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதம் வந்ததும் நினைவில் வருவது கிறிஸ்து பிறப்பு விழா தான். அவ்வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவராலும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் விழா கச்சனாவிளை குழந்தைகள் காப்பகத்தில் 06-12-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறைவேண்டலுடன் நிகழ்ச்சி துவங்க, பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மைக்லின் மேரி வரவேற்க, பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை பென்சிகர்லூசன் தலைமை தாங்கினார். காப்பகத்துக்கு குழந்தைகள் மகிழும்படியான நடனங்கள், பாடல்கள் நாடகங்கள் என கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி, அனைவருக்கும் உணவு பரிமாற விழா இனிதே நிறைவுற்றது. சுமார் 75 குழந்தைகள் உள்பட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இல்லத்து அருட்சகோதரிகள் நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்ப...

பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
  சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சி. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .  இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்பவர் இந்தியாவின் கௌரவச் செயலாளர் திரு. ஏ.சங்கர் மாணவ மாணவியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  இந்த நிகழ்ச்சியில்  கல்லூரி  துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி,டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி, ஆனந்தி, ஜாக்சன், டென்னிசன், ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக. ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாள் விழா

படம்
நேற்று 15-11-2024 வெள்ளிக்கிழமை  தூத்துக்குடியின் தந்தையும் தூத்துக்குடி ஜாமியா பள்ளியின் முதல் கௌரவ தலைவருமான ஐயா ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ,விக்டோரியா ரோடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிறந்த தினம்  கொண்டாடப்பட்டது பின்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக விஜயன் அவர்களும்,செயலாளராக இருதயராஜ் மஸ்கரனாஸ் அவர்களும்,பொருளாளராக அமலன் அவர்களும் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டர் உரிமையாளர் பிரேசர் கொனரா அவர்களும், ஏ ஐ சி சி டி யு  தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.  இந்த நிகழ்வில் வியாபார சங்க நிர்வாகிகளும், பகுதி மக்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். .

திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி

படம்
. திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி 19- 10-2024 அன்று . திருச்செந்தூரில்  சண்முகர் மஹாலில் 14 வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பாக  நடைபெற்றது.   இந்த   14 வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி உலக சிலம்பு  போட்டிக்கு சிறப்பு விருந்தினராக  சென்னையில் இருந்து வருகை தந்த திரை பட நடிகர " மீசை ராஜேந்திரன் " அவர்கள்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை கூறினார்.  இந்த போட்டியில்   தூத்துக்குடி சீலன்சுருதி நிறுவனர் மற்றும் இசையமைப்பாளர் சீலன், உலக சிலம்பம் தற்காப்பு  கலை சங்க  துணைத் தலைவர் விவின், துணைச் செயலாளர் ராஜமாதாங்கன், சிலம்ப மாஸ்டர் ராஜலிங்கம், தமிழரசன், உமாபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.      இந்த போட்டியை உலக சிலம்ப  தற்காப்பு கலை சங்கம் தலைவர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்.

எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்* நிறுவனம், சார்பில் ஓணம் பண்டிகை

படம்
திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு  கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் *எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்*  நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு     அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடினார்கள்.  வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன,  முன்னதாக வயநாட்டில் நிலச்சரவில் இறந்த மக்களுக்காக அவர்கள் குடும்பத்திற்காகவும் மௌன அஞ்சலையும் நிலச்சரியில் இருந்து  மீண்ட மக்களுக்காக  பிரார்த்தனைகளையும் செய்தார்கள் ,அவர்கள் வாழ்வில் இனி வரும் காலங்களில் நல்ல ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைகளை இறைவன் வழங்க பிராத்தனை செய்யப்பட்டது பிறகு விழாவில் நிறுவனத்தின் சேர்மன் திரு அகில் ராஜ், திரு.ஹாரிஸ் ஜெ ஜெயச்சந்திரன், திருமதி.ஆரிய ராஜ் ,  திரு. டிஜு அவர்களும், ப்ரொடக்ஷன் இன்ஜினியர் திரு. அருண், அக்கௌன்ட் அசிஸ்டன்ட் அனுப்புமா மற்றும் சுஜன் ,தமிழ்நாடு ஜோனல்  மேனேஜர் எஸ். முகமது இலியாஸ், மற்றும் மார்க்கெட்டிங் டீம் மற்றும் அனைத்து சக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பான ம...